அஞ்சல் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வுகள் இல்லாமல் அஞ்சல் துறையில் பணியமர இந்த வாய்ப்பை பற்றிக்கொள்ளுங்கள்!

இந்திய அஞ்சல் துறையில் 38,926 கிராமின் டாக் சேவக்ஸ் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இந்த வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

18 வயது முதல் 40 வயது வரையுள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்)/பழங்குடியினராய் இருந்தால் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராய் இருப்பின் 43 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தால் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய தபால் துரையின் வலைத்தளத்தில் தேர்வுக்கட்டணம் ரூ.100/- செலுத்தி, தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

நீங்க ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்)/பழங்குடியினர்/பெண் பாலினராக இருப்பின் தேர்வுக் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த வேளையில் சேர தேர்வு எழுத வேண்டுமா?

இல்லை. இந்த பணியில் சேர விண்ணப்பித்தால் மட்டும் போதும்.

அரசின் தேர்வு பட்டியலில் உங்கள் பெயர் இருப்பின் உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பணியமர்த்தப் படுவீர்கள்.

இன்னும் என்ன யோசனை?

இன்றே உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பியுங்கள்!

முயற்சி திருவினையாக்கும்!

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.06.2022