அரசு வேலைக்கு யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

அரசு வேலைக்கு யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம் என்றும், அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை மீறி வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது புகார் கொடுக்க பெற்றோர்கள் முன் வரவேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

செய்தியாளரிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  கூறியதாவது, “நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிகள் முழுவதும் தூய்மையாக
இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது பள்ளி கல்வித்துறை.

மேலும், யாரை நம்பியும் அரசு வேலைக்காக பணம் கொடுக்க வேண்டாம். தயவு செய்து இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் இருங்கள் என அறிவுறுத்தினார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்க முன் வாருங்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்