இந்தியாவில் விண்வெளி மையங்களின் பட்டியல் | LIST OF SPACE CENTERS IN INDIA
- இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும்.
- பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது.
- தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப்படுகிறது.
- இஸ்ரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது.
- இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.
விண்வெளி மையம் | அமைவிடம் |
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் | அகமதாபாத் |
குறைகடத்தி ஆய்வகம் | சண்டிகர் |
தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் | சித்தூர் |
விண்வெளி பயன்முறை மையம் | அகமதாபாத் |
வட கிழக்கு விண்வெளி பயன்முறை மையம் | சில்லாங் |
சோதனை மையங்கள் | அமைவிடம் |
திரவ உந்துகை அமைப்பு மையம் | பெங்களூரு , வலியமலா ( திருவனந்தபுரம் ), மற்றும் மகேந்திரகிரி ( திருநெல்வேலி மாவட்டம் ) |
கட்டமைப்பு மற்றும் ஏவல் மையங்கள் | அமைவிடம் | |
சுவடு தொடரல் மற்றும் கட்டளை மையங்கள்(Tracking and control facilities) | அமைவிடம் | |
இஸ்ரோ செயற்கைகோள் மையம் | பெங்களூரு | |
மின் – ஒளியியலான அமைப்புகளுக்கான ஆய்வகம் -LEOS | பெங்களூரு | |
சதீஸ் தவான் விண்வெளி மையம் | ஸ்ரீஹரிக்கோட்டா | |
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் | திருவனந்தபுரம் | |
தும்பா நிலநடுக்கோட்டு விறிசு ஏற்றுகை நிலையம் | திருவனந்தபுரம் | |
இந்திய ஆழ் விண்வெளி பிணையம் Indian Deep Space Network ( (IDSN) | பெங்களூரு | |
தேசிய தொலையுணர்வு மையம் | ஐதராபாத் | |
இஸ்ரோ தொலைப்பதிவு , சுவடுதொடரல் மற்றும் கட்டளை பிணையம் (ISRO Telemetry, Tracking and Command Network) | பெங்களூரு ( தலைமையகம் ) மற்றும் இந்தியாவிலும் உலகெங்கும் பல தரை நிலையங்கள் . | |
தலைமைக் கட்டுப்பாட்டு மையம் | கர்நாடகம் | |
மனிதவள மேம்பாடு மையம் | அமைவிடம் |
இந்திய தொலையுணர்வுக் கழகம் (IIRS) | தேராதூன் |
இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம் (IIST) | திருவனந்தபுரம் |
மேம்படுத்தல் மற்றும் கல்விக்கான தொடர்பியல் பிரிவு | அகமதாபாத் |