சென்னை பெருநகர ஆணையத்தில் ஓட்டுநர் வேலை … 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவிக்கு இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் (CMDA) Driver பணிகளுக்கு 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் www.cmdachennai.gov.in என்ற இணையதள முகவரியில் Online வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். (விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் முலமாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது).

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்
வேலையின் பெயர்Driver
காலிப்பணி இடங்கள்25 காலிப்பணி இடங்கள்
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி13.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி25.10.2021
கல்வி தகுதிஏதேனும் ஒரு அரசு பாடத்திட்டன் கீழ் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை
விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்SC/ST – ரூ.150/-Others – ரூ.300/-

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய ஓட்டுநர் வேலைக்கான நிபந்தனைகள் :

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான தகுதி சான்றிதழ்கள், விண்ணப்பதாரரின் புகைப்படம் (Recent Passport size photo) மற்றும் கையொப்பம் ஆகியவற்றை தவறாமல் பதிவேற்றம் செய்தல் வேண்டும். (குறைகளுடன் உள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது).
  • OC / BC / BC (M) / MBC & DNC பிரிவை சேர்ந்தவர்கள், ரூ.300/- மற்றும் SC / ST பிரிவை சேர்ந்தவர்கள், ரூ.150/- க்கான விண்ணப்ப கட்டணம்
    இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது Online மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
  • தகுதியில்லாத மற்றும் விண்ணப்பக் கட்டணம் முறையாக செலுத்தாமல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • விண்ணப்பதாரர் தனது இருப்பிட சான்று குறித்து ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அட்டை எதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்,
  • விண்ணப்பதாரர் தனது பிறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ், கல்வி தகுதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், முன் அனுபவத்திற்கான சான்றிதழ் மற்றும் வாகன பராமரிப்பு
    அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை சுயசான்றொப்பமிட்டு (self attested) முறையாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
  • மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ மற்றும் எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cmdadirectrecruitment.in/ இந்த லிங்கில் சென்று காணவும்.